/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சமூக விரோதிகளின் கூடாராகும் மீஞ்சூர் காவலர் குடியிருப்பு சமூக விரோதிகளின் கூடாராகும் மீஞ்சூர் காவலர் குடியிருப்பு
சமூக விரோதிகளின் கூடாராகும் மீஞ்சூர் காவலர் குடியிருப்பு
சமூக விரோதிகளின் கூடாராகும் மீஞ்சூர் காவலர் குடியிருப்பு
சமூக விரோதிகளின் கூடாராகும் மீஞ்சூர் காவலர் குடியிருப்பு
ADDED : ஜூலை 20, 2024 06:09 AM

மீஞ்சூர்: மீஞ்சூர் காவல் நிலையத்தின் அருகில், கடந்த 1999ல் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில், காவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
ஒவ்வொரு கட்டடத்திலும் தரை, முதல் மற்றும் இரண்டாம் தளம் என ஆறு குடியிருப்புகள் உள்ளன. இதுபோன்று, நான்கு அடுக்குமாடி கட்டடங்களில் மொத்தம், 24 இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோருக்கு தனித்தனி குடியிருப்புகளும் கட்டப்பட்டன.
கட்டடம் கட்டி, 15 ஆண்டுகளிலேயே அதன் உறுதித்தன்மையை இழந்தது. இதனால், கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டன.
குடியிருப்புகள் ஒவ்வொன்றாக சேதம் அடைந்ததை தொடர்ந்து, காவலர்கள் அவற்றை பயன்படுத்துவதை தவிர்த்தனர்.
கடந்த 10 ஆண்டுகளாக மேற்கண்ட காவலர் குடியிருப்பு கட்டடங்கள், பயன்பாடு இல்லாமல் பாழடைந்து கிடக்கின்றன.
தற்போது கட்டடங்களில் அதிகளவில் விரிசல்கள் ஏற்பட்டும், சிமென்ட் பூச்சுகள் கொட்டியும் வருகின்றன. இவை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் அபாயகரமாக உள்ளன.
தற்போது இவை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மாலை நேரங்களில் மது குடிப்பவர்கள், கஞ்சா புகைப்பவர்கள் இந்த வளாகத்தை பயன்படுத்துகின்றனர்.
பாழடைந்த காவலர் குடியிருப்புகள் அருகே மீஞ்சூர் அரசு உயர்நிலை பள்ளி மற்றும் மற்ற குடியி ருப்புகள் அமைந்து உள்ளதால், கட்டடம் இடிந்து விழுந்தால் அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
பாழடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள காவலர் குடியிருப்பு கட்டடங்களை முழுமையாக இடித்து அகற்றி, மாற்று திட்டங்களுக்கு அந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.