/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மருத்துவ முகாம் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மருத்துவ முகாம்
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மருத்துவ முகாம்
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மருத்துவ முகாம்
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மருத்துவ முகாம்
ADDED : ஜூன் 01, 2024 06:24 AM

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை, அரிசந்திராபுரம், திருவாலங்காடு, சக்கரமநல்லூர், பழையனூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக 150க்கும் மேற்பட்ட மக்கள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து நேற்று முன்தினம் நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து நேற்று அரிசந்திராபுரம் மற்றும் பழையனூர் கிராமங்களில் திருவாலங்காடு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பிரகலாதன் தலைமையில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது.
பழையனூரில் குடிநீர் தொட்டிகளில் உள்ள நீரில் குளோரின் அளவு குறித்து சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதேபோல் திருவாலங்காடு கிராமம், பாஞ்சாலி நகர், பராசக்தி நகரில் தெருவாரியாக முகாம் அமைத்து மக்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகள் வழங்கினர். 200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.