/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 2.79 லட்சம் கால்நடைக்கு கோமாரி நோய் தடுப்பூசி 2.79 லட்சம் கால்நடைக்கு கோமாரி நோய் தடுப்பூசி
2.79 லட்சம் கால்நடைக்கு கோமாரி நோய் தடுப்பூசி
2.79 லட்சம் கால்நடைக்கு கோமாரி நோய் தடுப்பூசி
2.79 லட்சம் கால்நடைக்கு கோமாரி நோய் தடுப்பூசி
ADDED : ஜூன் 01, 2024 05:52 AM
திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் 2.79 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி, ஜூன் 10 முதல் ஜூலை 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஏற்கனவே நான்கு கட்டமாக தடுப்பூசி செலுத்திய நிலையில், ஐந்தாவது கட்டமாக, திருவள்ளுர் மாவட்டத்தில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து ஊராட்சிகளில் கால்நடை உரிமையாளர்கள் தங்களின் பசு, எருது, எருமை மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்று குட்டி ஆகியவற்றுக்கு தங்கள் கிராமத்தில் முகாம் நடைபெறும் நாளன்று கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.