/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கழிவுநீர் ஆறாக மாறி வரும் மணவாளநகர் கூவம் ஆறு கழிவுநீர் ஆறாக மாறி வரும் மணவாளநகர் கூவம் ஆறு
கழிவுநீர் ஆறாக மாறி வரும் மணவாளநகர் கூவம் ஆறு
கழிவுநீர் ஆறாக மாறி வரும் மணவாளநகர் கூவம் ஆறு
கழிவுநீர் ஆறாக மாறி வரும் மணவாளநகர் கூவம் ஆறு
ADDED : ஜூலை 03, 2024 12:50 AM

திருவள்ளூர்,:பேரம்பாக்கம் அடுத்த, கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் உருவாகும் கூவம் ஆறு, பேரம்பாக்கம், கொண்டஞ்சேரி, சத்தரை, அகரம், கடம்பத்துார், அதிகத்துார், மணவாளநகர், புட்லுார், அரண்வாயல் வழியாக, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே, கடலில் கலக்கிறது.
இதில், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாளநகர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றுப்பகுதியில் ஒருபுறம் குப்பையும், மறுபுறம் வீடுகள், கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் சேகரமாகி வருகிறது.
மேலும் கோழி போன்ற இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பையும் கூவம் ஆற்றுப்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, வெங்கத்துார் ஊராட்சி பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் கூவம் ஆற்றுப்பகுதியில், குப்பை மற்றும் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், கூவம் ஆற்றை சீரமைக்க வேண்டுமெனவும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.