/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'சர்பிங்' அரையிறுதி போட்டி மாமல்லை கமலி முதலிடம் 'சர்பிங்' அரையிறுதி போட்டி மாமல்லை கமலி முதலிடம்
'சர்பிங்' அரையிறுதி போட்டி மாமல்லை கமலி முதலிடம்
'சர்பிங்' அரையிறுதி போட்டி மாமல்லை கமலி முதலிடம்
'சர்பிங்' அரையிறுதி போட்டி மாமல்லை கமலி முதலிடம்
ADDED : ஜூன் 23, 2024 07:52 AM

மாமல்லபுரம் : மாமல்லபுரம் மாணவி கமலி, தேசிய அலைசறுக்கு அரையிறுதி போட்டியில் முதலிடம் வென்றார்.
இந்தியா சார்பில், சர்வதேச 'சர்பிங்' போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தகுதி தேர்விற்கான,தேசிய அரையிறுதி போட்டிகள், கர்நாடக மாநிலம் மங்களூருவில் 'சர்பிங் பெடரேஷன் ஆப் இந்தியா' சார்பில் நடத்தப்பட்டது.
இப்போட்டியில், மாமல்லபுரத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி கமலி, 14 -16 வயதிற்குட்பட்ட, ஜூனியர் பெண்கள் பிரிவு மற்றும் இந்திய ஓபன் பிரிவு ஆகிய இரண்டு போட்டிகளிலும் பங்கேற்று, முதலிடம் வென்றார். அவரது சகோதரர், ஏழாம் வகுப்பு மாணவர் ஹரிஷ், 11 - 16 வயதிற்குட்பட்ட, ஜூனியர் ஆண்கள் பிரிவில் பங்கேற்று, இரண்டாமிடம் வென்றார். கடந்த மார்ச் மாதம், கேரள மாநிலத்தில் நடந்த போட்டியிலும், ஜூனியர் பெண்கள் பிரிவில், கமலி முதலிடம் வென்றார்.
தமிழகத்தில் நடக்கவுள்ள இறுதிப் போட்டியில், அவர்கள் இருவரும் பங்கேற்க உள்ளனர். இதில் தேர்வுசெய்யப்படும் இந்திய வீரர்கள், மாலத்தீவில் நடக்கவுள்ள, சர்வதேச போட்டியில் பங்கேற்பர்.
மீனவ குடும்பத்தை சேர்ந்த கமலியின் வாழ்க்கை சூழல், ஆர்வம், பயிற்சி குறித்து, நியூசிலாந்து நாட்டின் குறும்பட இயக்குனர் ஷாஷா ரெயின்போ என்பவர், குறும்படம் தயாரித்தார். இந்தபடம் சர்வதேச குறும்பட போட்டியில் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.