Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பவானியம்மன் கோவிலில் வரும் 12ல் கும்பாபிேஷகம்

பவானியம்மன் கோவிலில் வரும் 12ல் கும்பாபிேஷகம்

பவானியம்மன் கோவிலில் வரும் 12ல் கும்பாபிேஷகம்

பவானியம்மன் கோவிலில் வரும் 12ல் கும்பாபிேஷகம்

ADDED : ஜூலை 09, 2024 11:18 PM


Google News
ஊத்துக்கோட்டை,:திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் வரும், 12ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி, இன்று காலை, 9:00 மணிக்கு கணபதி பூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரகக ேஹாமம், லட்சுமி ேஹாமம், தீபாராதனை நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை நடக்கிறது.

நாளை காலை, 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, அஷ்டபந்தன சமர்ப்பணம், சதுர்வேத பாராயணம், மாலை, 3:00 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜை, ேஹாமம் நடக்கிறது.

விழாவின் முக்கிய நாளான வரும், 12ம் தேதி காலை, 4:00 மணிக்கு அவபிரதயாகம், யாக பூஜை, பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கலச புறப்பாடு நடக்கிறது.

காலை, 6:00 மணிக்கு ஸ்ரீபவானி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடைபெறும். காலை, 10:00 மணிக்கு பவானி அம்மனுக்கு மகா அபிேஷகம், தீராராதனையும், இரவு, 7:00 மணிக்கு உற்சவர் விநாயகர், பவானி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us