/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கண்ணன்கோட்டை --- கரடிபுத்துார் சாலையை சீரமைக்க கோரிக்கை கண்ணன்கோட்டை --- கரடிபுத்துார் சாலையை சீரமைக்க கோரிக்கை
கண்ணன்கோட்டை --- கரடிபுத்துார் சாலையை சீரமைக்க கோரிக்கை
கண்ணன்கோட்டை --- கரடிபுத்துார் சாலையை சீரமைக்க கோரிக்கை
கண்ணன்கோட்டை --- கரடிபுத்துார் சாலையை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 15, 2024 11:20 PM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே உள்ளது கண்ணன் கோட்டை கிராமம். அங்குள்ள நீர்த்தேக்கத்தை ஒட்டி, கரடிபுத்துார் நோக்கி செல்லும் சாலை மாநில நெடுஞ்சாலை துறையினர்பராமரிப்பில் உள்ளது.
அந்த சாலை, பலஇடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. தற்போது பெய்து வரும் மழையால்,அந்த பள்ளங்களில்மழைநீர் தேங்கி குட்டைகள் போல் காட்சியளிக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திந்து வருகின்றனர்.
குறிப்பாக இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் தடுமாறி விழும் நிலை ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். உடனடியாக அந்தசாலையில் ஏற்பட்டுள்ள சேதங்களை சரி செய்ய, மாநில நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.