/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஜூலை 29 - ஆகஸ்ட் 8 சிறப்பு மக்கள் நீதிமன்றம் ஜூலை 29 - ஆகஸ்ட் 8 சிறப்பு மக்கள் நீதிமன்றம்
ஜூலை 29 - ஆகஸ்ட் 8 சிறப்பு மக்கள் நீதிமன்றம்
ஜூலை 29 - ஆகஸ்ட் 8 சிறப்பு மக்கள் நீதிமன்றம்
ஜூலை 29 - ஆகஸ்ட் 8 சிறப்பு மக்கள் நீதிமன்றம்
ADDED : ஜூன் 28, 2024 02:34 AM
திருவள்ளூர்:சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில், பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஜூலியட் புஷ்பா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சுப்ரீம் கோர்ட்டில், நிலுவையில் உள்ள வழக்குகளில், சமரச தீர்வு காணும் வகையில் வரும் ஜூலை 29 முதல் ஆக., 8 வரை சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்த சுப்ரீம் கோர்ட் ஏற்பாடு செய்துள்ளது.
வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குதரப்பினர், தங்களது வழக்குகளை சமரசமாக முடிக்க திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவிடம் அணுகலாம்.
இணையதள வசதி வாயிலாக பங்கேற்று, சமரசமுறையில் தீர்வு காணலாம்.
நீதிமன்ற முத்திரைக் கட்டணம் முழுதுமாக திரும்ப வழங்கப்படுவதும், இறுதி மற்றும் செயல்படுத்துவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதும் இதன் சிறப்பம்சம்.
எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது வழக்குகள் ஏதேனும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்தால் அந்த வழக்குகளை சமரச முறையில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணலாம்.
சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களது வழக்கு விவரங்களை, அருகில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் சட்ட உதவி மையத்தில் தெரிவிக்கலாம்.
மேலும், திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவினை, 044- 27660120 மற்றும் உதவி எண் 044- 25342441 என்ற தொலைபேசி எண்ணிலும், dlsatiruvallur1@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.