/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கைதிகளுக்கு அடிப்படை வசதி சிறைகளில் நீதிபதி ஆய்வு கைதிகளுக்கு அடிப்படை வசதி சிறைகளில் நீதிபதி ஆய்வு
கைதிகளுக்கு அடிப்படை வசதி சிறைகளில் நீதிபதி ஆய்வு
கைதிகளுக்கு அடிப்படை வசதி சிறைகளில் நீதிபதி ஆய்வு
கைதிகளுக்கு அடிப்படை வசதி சிறைகளில் நீதிபதி ஆய்வு
ADDED : ஜூன் 06, 2024 11:19 PM
திருவள்ளூர்:உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, திருவள்ளூர், திருத்தணி கிளை சிறையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா தலைமையில், கலெக்டர் பிரபுசங்கர், எஸ்.பி., ஸ்ரீநிவாச பெருமாள், மோட்டார் வாகன சிறப்பு நீதிபதி சரஸ்வதி, தலைமை குற்றவியல் நடுவர் மோகன், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர் தீனதயாளன் ஆகியோர் கூட்டாய்வு மேற்கொண்டனர்.
கைதிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, உணவு தரமாக உள்ளதா என்பதை சிறை கைதிகளிடம் கேட்டறிந்தனர். ஆவணங்களையும் சரிபார்த்த பின், சேதமடைந்த கட்டடங்களை அகற்றி விட்டு, புதிதாக கட்ட அறிவுறுத்தினார்.
இந்த அறிக்கை விபரங்கள், பின்னர் சமர்ப்பிக்கப்படும் என, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் அறிவுறுத்தல்
''திருவள்ளூர் மாவட்டத்தில், குடிசை வீடுகள் இல்லாத ஊராட்சிகளாக மாற வேண்டும்,'' என, கலெக்டர் தெரிவித்தார்.
குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பயனாளிகளுக்கு 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் தொகுப்பு வீடு கட்டித்தரப்பட உள்ளது.
இந்த நிலையில், கலெக்டர் பிரபுசங்கர், நேற்று திருவள்ளூர் ஒன்றியம் புலியூர், திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம் ஊராட்சி சீனிவாசபுரம் கிராமத்தில், பயனாளிகள் தேர்வை பார்வையிட்டார்.
பின், கலெக்டர் கூறுகையில், 'தமிழக அரசின் முக்கிய திட்டமான 'கலைஞரின் கனவு இல்ல திட்டம்' மூலம் குடிசை வீடுகள் இல்லாத ஊராட்சிகளாக மாற்ற வேண்டும்' என்றார்.
உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சுகபுத்ரா, மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.