/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருப்பாச்சூரில் வரி வசூலிப்பதில் முறைகேடு ஊரக வளர்ச்சி துறைக்கு அதிகாரி அறிக்கை திருப்பாச்சூரில் வரி வசூலிப்பதில் முறைகேடு ஊரக வளர்ச்சி துறைக்கு அதிகாரி அறிக்கை
திருப்பாச்சூரில் வரி வசூலிப்பதில் முறைகேடு ஊரக வளர்ச்சி துறைக்கு அதிகாரி அறிக்கை
திருப்பாச்சூரில் வரி வசூலிப்பதில் முறைகேடு ஊரக வளர்ச்சி துறைக்கு அதிகாரி அறிக்கை
திருப்பாச்சூரில் வரி வசூலிப்பதில் முறைகேடு ஊரக வளர்ச்சி துறைக்கு அதிகாரி அறிக்கை
ADDED : ஜூன் 13, 2024 12:31 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் தாலுகா, பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பாச்சூர் ஊராட்சியில், 12 உறுப்பினர்கள் உள்ளனர். ஊராட்சி தலைவராக சோபன்பாபு, வரி வசூலிப்பது, கட்டட வரைபட அனுமதி வழங்குவது உட்பட பல்வேறு முறைகேடு செய்து வருவதாக, துணை தலைவர் உட்பட 12 வார்டு உறுப்பினர்களும், கலெக்டர், ஊராட்சி உதவி இயக்குனர் மற்றும் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்துாரி விசாரணை நடத்தினார்.
இதில், வரி செலுத்திய மற்றும் கட்டட வரைபட அனுமதி பெற்ற சிலரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். அதில், பலரிடம் வரி வசூலித்தும், கட்டட வரைபடம் அனுமதி வழங்கியும் தலைவர் கையெழுத்திட்டது தெரிய வந்தது.
ஆனால், அந்த பணத்தை வங்கியில் ஊராட்சி கணக்கில் செலுத்தாததும், அதை ஏற்கனவே இருந்த ஊராட்சி செயலர் மற்றும் தற்போதைய செயலர் ஆகியோர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து, முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டதாக, விசாரணை அதிகாரி, கடந்த 10ம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கையை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி உதவி இயக்குனரிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கையை பெற்ற பின், கலெக்டர் மற்றும் ஊராட்சி உதவி இயக்குனர் நடவடிக்கை எடுப்பார்களா என, திருப்பாச்சூர் ஊராட்சி அனைத்து உறுப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.