/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்க அழைப்பு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்க அழைப்பு
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்க அழைப்பு
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்க அழைப்பு
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 21, 2024 06:50 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும், பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு மூத்த ஆலோசகர் உள்ளிட்ட 5 பணியிடம் நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்கள், குடும்பம், சமூதாயம் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் திருத்தணி, திருவள்ளூர் ஆகிய இடங்களில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படுகிறது.
இம்மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் மூத்த ஆலோசகர், வழக்கு பணியாளர், தொழில்நுட்ப பணியாளர், பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகிய ஐந்து பணியிடங்களில் தகுதி வாய்ந்த பெண்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட இணையதள முகவரி https://tiruvallur.nic.in -ல் பணியிடம் மற்றும் தகுதி குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட இணையதளமுகவரியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, மேற்கண்ட அலுவலகங்களில் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.