/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் புதிய கடன் திட்டம் அறிமுகம் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் புதிய கடன் திட்டம் அறிமுகம்
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் புதிய கடன் திட்டம் அறிமுகம்
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் புதிய கடன் திட்டம் அறிமுகம்
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் புதிய கடன் திட்டம் அறிமுகம்
ADDED : ஜூலை 10, 2024 12:15 AM
திருவள்ளூர்:
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் புதிய கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, கடம்பத்துார், மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஆகிய நான்கு வட்டங்களுக்கு உட்பட்ட, 198 ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஊரக தொழில் முனைவோருக்கு இணை மானிய நிதி திட்டத்தில் 30 சதவீதம் மானியத்தில் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 177 பேருக்கு தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தற்போது சிறிய மாற்றம் செய்து ' நியூ டூ பிசினஸ்' என்ற புதிய கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதுவரை வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களில் தொழில் கடன் பெறாமல் இருப்போருக்கு, இப்புதிய திட்டத்தில் தொழில் கடன் வழங்கப்படும்.
விருப்பம் உள்ள 21-45 வயதிற்கு உட்பட்ட சுய குழு உறுப்பினர்கள், கும்மிடிப்பூண்டி - 96007 48040, கடம்பத்துார் --99527 87656, மீஞ்சூர்- 97903 57117 மற்றும் சோழவரம்- 90470 32130 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.