/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ரூ.48 லட்சம் பறிமுதல் ஆந்திர நபர்களிடம் விசாரணை ரூ.48 லட்சம் பறிமுதல் ஆந்திர நபர்களிடம் விசாரணை
ரூ.48 லட்சம் பறிமுதல் ஆந்திர நபர்களிடம் விசாரணை
ரூ.48 லட்சம் பறிமுதல் ஆந்திர நபர்களிடம் விசாரணை
ரூ.48 லட்சம் பறிமுதல் ஆந்திர நபர்களிடம் விசாரணை
ADDED : ஜூலை 22, 2024 05:54 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்., அருகே நேற்று அதிகாலை சந்தேகம் ஏற்படும்படி இருவர் நின்றிருந்தனர்.
ரோந்து பணியில் இருந்த கும்மிடிப்பூண்டி போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர்களை சோதனையிட்டனர். அப்போது, துணி பைகளில் இருவரும் இடுப்பில் மறைத்து வைத்திருந்த, கணக்கில் வராத, 48 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
அவர்கள், ஆந்திர மாநிலம் ராஜ மந்திரி பகுதியை சேர்ந்த பிரசாந்த், 42, தெனாலியை சேர்ந்த நாகவெங்கட் பவன், 25, என்பது தெரியவந்தது.
சென்னையில் நகை வாங்குவதற்காக சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த இருவரும், கும்மிடிப்பூண்டியில் இறங்கி, பேருந்தில் செல்ல காத்திருந்ததாக தெரிவித்தனர்.
பறிமுதல் செய்த பணம், இருவரையும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருவான வரித்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர். வருமான வரித்துறையினர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.