/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'பிரிக்ஸ்' டேபிள் டென்னிஸ் பதக்கம் வென்றது இந்திய அணி 'பிரிக்ஸ்' டேபிள் டென்னிஸ் பதக்கம் வென்றது இந்திய அணி
'பிரிக்ஸ்' டேபிள் டென்னிஸ் பதக்கம் வென்றது இந்திய அணி
'பிரிக்ஸ்' டேபிள் டென்னிஸ் பதக்கம் வென்றது இந்திய அணி
'பிரிக்ஸ்' டேபிள் டென்னிஸ் பதக்கம் வென்றது இந்திய அணி
ADDED : ஜூன் 17, 2024 03:43 AM

சென்னை : ரஷ்யாவின் கசான் நகரில் நடந்து வரும், 'பிரிக்ஸ்' விளையாட்டுப் போட்டியில், டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்தியா முதல் பதக்கம் வென்றது.
'பிரிக்ஸ்' கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள், ரஷ்யாவின் கசான் நகரில், கடந்த 12ம் தேதி துவங்கின.
மொத்தம் 27 விளையாட்டுகளில், 90 நாடுகளைச் சேர்ந்த 4,751 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில், பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற பொய்மண்டி பைஸ்யா, மவுமிதா தத்தா மற்றும் யாஷினி ஆகியோர் அடங்கிய அணி, வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.
இதன் அரையிறுதி போட்டியில், பலம் வாய்ந்த சீன அணியை எதிர்த்து, இந்திய மகளிர் அணி களமிறங்கியது.
இதில், முதல் ஆட்டத்தில் தமிழக வீராங்கனை யாஷினி 11---7, 4---11, 11---8, 7---11, 11---2 என்ற செட் கணக்கில் வென்றார். எஞ்சிய மூன்று போட்டிகளை சீனா வென்று -3-1 என்ற ஆட்டக் கணக்கில், இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
'பிரிக்ஸ் விளையாட்டில் டேபிள் டென்னிஸ் போட்டியில் முதல் பதக்கம் வென்று, இந்திய தேசத்தை பெருமைப்படுத்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள்' என, புதிதாக பொறுப்பேற்றுள்ள, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.