/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குளத்தை மறைத்த ஆகாய தாமரை மறுவாழ்வு அளிக்க எதிர்பார்ப்பு குளத்தை மறைத்த ஆகாய தாமரை மறுவாழ்வு அளிக்க எதிர்பார்ப்பு
குளத்தை மறைத்த ஆகாய தாமரை மறுவாழ்வு அளிக்க எதிர்பார்ப்பு
குளத்தை மறைத்த ஆகாய தாமரை மறுவாழ்வு அளிக்க எதிர்பார்ப்பு
குளத்தை மறைத்த ஆகாய தாமரை மறுவாழ்வு அளிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 05, 2024 12:55 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த எலவம்பேடு கிராமத்தில் உள்ள பொதுக்குளத்தில் தேங்கும் நீரை, பல்வேறு தேவைகளுக்கு கிராமவாசிகள் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், சிறுவாக்கம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், குளத்தை சுற்றிலும் மரங்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.
தற்போது, குளம் முழுதும் ஆகாயத்தாமரை சூழ்ந்தும், முள்செடிகள் வளர்ந்தும் பராமரிப்பு இன்றி உள்ளது. ஆண்டு முழுதும் குளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தும், பராமரிப்பு இல்லாததால் அதை கிராமவாசிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:
குளத்தில் தேங்கும் தண்ணீரை துணி துவைக்க, குளிக்க, வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தோம். தற்போது குளத்தின் அருகே செல்ல முடியாத அளவிற்கு புதர் மண்டி உள்ளது.
குளத்தில் உள்ள ஆகாயத்தாமரையை முழுமையாக அகற்றி துாய்மை படுத்த வேண்டும். ஆங்காங்கே படித்துறைகள் அமைக்க வேண்டும். கரைகளை பலப்படுத்தி, அதன் மீது நடைபயிற்சி செல்பவர்களுக்கு ஏதுவாக நடைபாதை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.