ADDED : ஆக 04, 2024 02:13 AM
கும்மிடிப்பூண்டி, ஆக. 4--
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆந்திர மாநில அரசு பேருந்து ஒன்றை நிறுத்தி பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர்.
அதில் பயணித்த, சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த வீரசேகர், 34, என்பவரிடம் நான்கு கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.