/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அம்மனேரியில் சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி அம்மனேரியில் சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி
அம்மனேரியில் சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி
அம்மனேரியில் சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி
அம்மனேரியில் சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி
ADDED : ஜூலை 21, 2024 06:45 AM

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மனேரி கிராமத்தில், 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் மேற்கில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அதே வளாகத்தில், அங்கன்வாடி மையமும் அமைந்துள்ளது.
அங்கன்வாடி முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்த ஒருங்கிணைந்த வளாகத்தில் படித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இந்த பள்ளியின் வகுப்பறை கட்டடங்கள் சீரமைக்கப்பட்டன. இதனால், வகுப்பறை கட்டடங்கள் புதுப்பொலிவுடன் காணப்படுகின்றன. ஆனால் நுழைவாயிலை ஒட்டி, அமைந்திருந்த சுற்றுச்சுவர் கட்டப்படாமல் கிடக்கிறது.
இதனால், பள்ளி வளாகத்திற்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.