/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாநில பேச்சு போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு மாநில பேச்சு போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு
மாநில பேச்சு போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு
மாநில பேச்சு போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு
மாநில பேச்சு போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு
ADDED : ஜூலை 09, 2024 06:29 AM

திருவொற்றியூர்: திருவொற்றியூர், திருத்தங்கல் நாடார் பள்ளியில், கல்வி திருவிழா - 2024, காமராஜர் 122வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மாவட்ட அளவில், பள்ளிகள் இடையேயான பேச்சுப் போட்டி, நேற்று முன்தினம் நடந்தது.
அதன்படி, 6 - 8ம் வகுப்பு; 9 - 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 - பிளஸ் 2 என, மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. 25 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 265 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இதில், எண்ணுார், கத்திவாக்கம் அரசு பள்ளி மாணவர் எஸ்.கமலகண்ணன், பிளஸ் 1 பிரிவில், 'காமராஜரின் வாழ்வும் வெற்றியும்' என்ற தலைப்பில், பேச்சு போட்டியில் பங்கேற்றார். அசத்தலான பேச்சால், முதல் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கு, 7,000 ரூபாய், பதக்கம், சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விருதுநகரில், 10ல் நடக்கவிருக்கும், மாநில அளவிலான போட்டிக்கு, கமலகண்ணன் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.