/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அரசு பள்ளி அருகே குப்பை தொற்று நோய் அபாயம் அரசு பள்ளி அருகே குப்பை தொற்று நோய் அபாயம்
அரசு பள்ளி அருகே குப்பை தொற்று நோய் அபாயம்
அரசு பள்ளி அருகே குப்பை தொற்று நோய் அபாயம்
அரசு பள்ளி அருகே குப்பை தொற்று நோய் அபாயம்
ADDED : ஜூலை 19, 2024 03:55 PM

கடம்பத்துார்:
கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் பகுதியில் அமைந்துள்ளது கே.இ.நடேசன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி.
இங்கு சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 1, 300 மாணவ,மாணவியர் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி நுழைவு வாயில் அருகே குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை குப்பை நிறைந்து கிடப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தால் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பையை அகற்றவும், சாலையை சீரமைக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.