ADDED : ஜூலை 21, 2024 06:44 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பூண்டி காந்தி நகரில், கஞ்சா விற்பனை நடப்பதாக புல்லரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று போலீசார் அப்பகுதியில் சோதனையிட்டபோது, மூன்று பேர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை சோதனையிட்டபோது, 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, திருவள்ளூர் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து, பேரம்பாக்கம், ஹேமநாத், பழைய வெண்மனம்புதுாரைச் சேர்ந்த ராகுல்,20, சாம்பிரபு,19 ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.