/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நண்பனின் மனைவிக்காக கொலையில் முடிந்த 'நட்பு' நண்பனின் மனைவிக்காக கொலையில் முடிந்த 'நட்பு'
நண்பனின் மனைவிக்காக கொலையில் முடிந்த 'நட்பு'
நண்பனின் மனைவிக்காக கொலையில் முடிந்த 'நட்பு'
நண்பனின் மனைவிக்காக கொலையில் முடிந்த 'நட்பு'
ADDED : ஜூன் 24, 2024 02:03 AM
மீஞ்சூர்:பொன்னேரி அடுத்த சின்னகாவணம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன், 26; ரவுடி. இவர் மீது, பொன்னேரி போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது நண்பர், மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு, 24. இவர் மீது, மீஞ்சூர் போலீசில், பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், லட்சுமணனின் மனைவிக்கும், விஷ்ணுவிற்கும் தகாத உறவு ஏற்பட்டது. இதற்கு லட்சுமணன் இடையூறாக இருப்பதாக, அவரை தீர்த்துக்கட்ட விஷ்ணு திட்டம் தீட்டினார். இந்நிலையில், நேற்று விஷ்ணு, லட்சுமணனை மீஞ்சூருக்கு வரவழைத்து, ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
பின், நேற்று இரவு 7:30 மணிக்கு, போதையில் இருந்த லட்சுமணனை தோட்டக்காடு கிராமத்திற்கு அழைத்து சென்ற விஷ்ணு, நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் தலையில் வெட்டி கொலை செய்து தப்பினார்.
தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, லட்சுமணனின் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். கொலையாளிகளை தேடி வருகின்றனர்.