Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி

குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி

குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி

குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி

ADDED : ஜூலை 03, 2024 12:44 AM


Google News
திருவள்ளூர்:தமிழக அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு பணியாளர் தேர்வு வாரியம், குரூப்-2 மற்றும் குரூப்- 2ஏ தேர்வுக்கு, மொத்தம் 2,327 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 19 ஆகும். திருவள்ளூர் மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை முதல் தன்னார்வ பயிலும் வட்டத்தில் துவக்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புக்கு சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படுவதுடன் இலவச மாதிரி தேர்வுகளும், மாநில அளவிலான முழுமாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, 97897 14244, 82708 65957 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us