Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ உளுந்தை ஊராட்சி தலைவர் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

உளுந்தை ஊராட்சி தலைவர் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

உளுந்தை ஊராட்சி தலைவர் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

உளுந்தை ஊராட்சி தலைவர் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

ADDED : ஜூன் 21, 2024 01:21 AM


Google News
Latest Tamil News
கடம்பத்துர்:கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் உளுந்தை மற்றும் சுற்றியுள்ள மப்பேடு, முதுகூர், ஏ.என்.கண்டிகை, கிளாய், தொடுகாடு , நமச்சிவாயபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 180 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இங்கு 2024-25ம் கல்வியாண்டில் பள்ளியில் 6, 7,8,9,10 வகுப்புகளில் புதிதாக சேர்ந்த 60 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்.

பள்ளி தலைமையாசிரியர் பி.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் தன் சொந்த செலவில் தலா 9,000 மதிப்பில் 5.40 லட்ச ரூபாயிலான விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

விழாவில் கடம்பத்துார் ஒன்றிய மண்டல அலுவலர் சி. பாக்கியவதி, பணி மேற்பார்வையாளர் குமாரவேலு ஊராட்சி செயலர் குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஊராட்சி தலைவர் தனது சொந்த செலவில் சைக்கிள் வழங்கி வருகிறார்.

மேலும் இவர் இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் மற்றும் பள்ளியில் புரவலராக இருந்து வருகிறார். மேலும் பள்ளி வளாகத்தில் 30 லட்சம் மதிப்பில் புதிய நான்கு வகுப்பறை கட்டடமும் கட்டி வருகிறார் என பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்தார்.

வழக்கமாக அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்படும்.

ஆனால் உயர் நிலை பள்ளியில் படிக்கும் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான ஏழை மாணவர்களுக்கு தரமான இலவச சைக்கிள் வழங்கும் ஊராட்சி தலைவரை மாணவர்களின் பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us