ADDED : ஜூன் 28, 2024 02:42 AM
சோளிங்கர்:ஆர்.கே.பேட்டை அடுத்த வீராணத்துார் காலனியை சேர்ந்தவர் வினோத்குமார், 22. இவர், நேற்று முன்தினம் வீராணத்துார் கன்னியம்மன் கோவில் காட்டுப்பகுதியில், அவரது நண்பர்கள் புருசோத்தமன், கார்த்திக், விஜய் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு கத்தியுடன் வந்த நான்கு பேர், வினோத்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி, அவரது மொபைல் போனை பறித்து சென்றனர்.
இது குறித்து வினோத்குமார், ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார், நேற்று ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பவணந்தி, 24, பரத், 19, சுஜேந்திரன், 19, மோகன், 19, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.