/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கரும்பு விவசாயிகளுக்கு முதல் தவணை ரூ.1.63 கோடி கரும்பு விவசாயிகளுக்கு முதல் தவணை ரூ.1.63 கோடி
கரும்பு விவசாயிகளுக்கு முதல் தவணை ரூ.1.63 கோடி
கரும்பு விவசாயிகளுக்கு முதல் தவணை ரூ.1.63 கோடி
கரும்பு விவசாயிகளுக்கு முதல் தவணை ரூ.1.63 கோடி
ADDED : ஜூன் 28, 2024 10:59 PM
திருவள்ளூர்:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய, விவசாயிகளுக்கு முதல் தவணையாக, 1.63 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவாலங்காட்டில் செயல்பட்டு வரும், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-- --24ம் ஆண்டில் அரவைப் பருவத்திற்கு 19 கோடியே 63 லட்சத்து 79 ஆயிரம் கிலோ கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. வேலுார் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு பரிமாற்றம் முறையில் 1.63 கோடி கிலோ கரும்பு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த 1,370 விவசாயிகளுக்கு முதல் தவணையாக ஆயிரம் கிலோவுக்கு 2,000 வீதம் 39.27 கோடி ரூபாய் கரும்பு கிரயத் தொகை அவரவர் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2024- 25ம் ஆண்டிற்கு 2 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.