/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தொண்டை வலியுடன் காய்ச்சல் சென்னையில் அதிகரிப்பு தொண்டை வலியுடன் காய்ச்சல் சென்னையில் அதிகரிப்பு
தொண்டை வலியுடன் காய்ச்சல் சென்னையில் அதிகரிப்பு
தொண்டை வலியுடன் காய்ச்சல் சென்னையில் அதிகரிப்பு
தொண்டை வலியுடன் காய்ச்சல் சென்னையில் அதிகரிப்பு
ADDED : ஜூலை 17, 2024 12:40 AM
சென்னை, சென்னையில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த சீதோஷ்ண நிலை காரணமாக சென்னையில், காய்ச்சல், சளி, இருமல் போன்ற உடல்நல பாதிப்புக்கு ஆளாகி பலர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது அதிகரித்து உள்ளது.
வழக்கமாக, 50 பேர் வரை சிகிச்சை பெறும் மருத்துவமனைகளில், 70 முதல் 100 பேர் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மழை பெய்து வருவதால், சிலர் தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனை மற்றும் கிளினிக் போன்றவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், ஒரே பகுதியில் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை. சீதோஷ்ண நிலையால், பரவலாகத் தான் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி பருக வேண்டும்.
ஹோட்டல் உணவுகள் தவிர்ப்பது போன்றவற்றின் வாயிலாக, சீதோஷ்ண நிலையில் பரவும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.