Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கூட்டு குடிநீர் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு

கூட்டு குடிநீர் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு

கூட்டு குடிநீர் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு

கூட்டு குடிநீர் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு

ADDED : ஜூன் 20, 2024 12:54 AM


Google News
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, வெளியகரம் ஊராட்சி அருகே செல்லும் கொசஸ்தலை ஆற்றில் புதிய கூட்டு குடிநீர் திட் டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை பிறப்பித்தது. இந்த திட்டத்திற்கு 44.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், கடந்த, 2022ம் ஆண்டு நிர்வாக ஒப்புதலும் வழங்கப்பட்டது.

இத்திட்டம் செயல்படுத்துவதற்கு தேவையான நீரை கொசஸ்தலை ஆற்றில் நீர் ஆதாரமாகக் கொண்டு 6 உறிஞ்சு கிணறுகள் மூலம் நாள்தோறும், 2.76 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுத்து திருத்தணி ஒன்றியம் செருக்கனூர், தாடூர், எஸ்.அக்ராஹாரம், கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஆர்.கே.பேட்டை, வங்கனுார், ஜி.சி.எஸ்., கண்டிகை, எஸ்.வி.ஜி.புரம் ஆகிய ஒன்பது ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு குழாய்கள் அமைக்கும் பணிகள் தற்போது துரித வேகத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் பள்ளிப்பட்டு மற்றும் வெளியகரம் மக்கள், விவசாயிகள் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் செயல்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுக்கும் , பள்ளிப்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடையே சமரச பேச்சு கோட்டாட்சியர் தீபா தலைமையில் நடந்தது.

அப்போது பள்ளிப்பட்டு பகுதி மக்கள், இத்திட்டம் செயல்படுத்தப் பட்டால், எங்கள் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்படும்.

இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் எங்கள் ஊராட்சிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. எனவே இந்த திட்டத்தை எங்கள் பகுதியில் செயல்படுத்தக் கூடாது என தெரிவித்தனர்.

கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுவதால் ஒன்பது ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது. மேலும் இந்த திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு ஏற்படாது.

கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களுடன் பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் சுமுக பேச்சு நடைபெறும் என, கோட்டாட்சியர் தீபா தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us