/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ விவசாயி நலன் காக்கும் கூட்டம் திருவள்ளூரில் நாளை நடக்கிறது விவசாயி நலன் காக்கும் கூட்டம் திருவள்ளூரில் நாளை நடக்கிறது
விவசாயி நலன் காக்கும் கூட்டம் திருவள்ளூரில் நாளை நடக்கிறது
விவசாயி நலன் காக்கும் கூட்டம் திருவள்ளூரில் நாளை நடக்கிறது
விவசாயி நலன் காக்கும் கூட்டம் திருவள்ளூரில் நாளை நடக்கிறது
ADDED : ஜூலை 24, 2024 10:51 PM
திருவள்ளூர்:திருவள்ளுர் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நாளை நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், நாளை காலை 10:00 மணியளவில் நடக்கிறது.இக்கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம்.கூட்டுறவு, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி மற்றும் இதர வேளாண் சார்ந்த துறைகளின் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்.
எனவே, திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் பங்கேற்று விவசாயம் சார்ந்த குறைகளுக்கு தீர்வு பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.