/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
ADDED : ஜூலை 25, 2024 12:19 AM

ஆவடி:சென்னை ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டையில், இந்திய விமானப்படை தளம் உள்ளது. இங்கு, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் காளிதாஸ், 55 என்பவர், பாதுகாப்பு ஊழியராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி ஜீவஸ்ரீ. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். காளிதாஸ், கடந்த இரு தினங்களாக, விமானப்படை எட்டாம் எண் டவரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3:55 மணியளவில், அவர் பயன்படுத்தி வந்த 'ஏ.கே., 47' ரக துப்பாக்கியால், தொண்டையில் தனக்குத்தானே சுட்டுக்கொண்டார். இதில் அடுத்தடுத்து மூன்று தோட்டாக்கள் பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார், அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.