/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பரிதாபமான சாலையால் கூடப்பாக்கம் பகுதிவாசிகள் சிரமம் பரிதாபமான சாலையால் கூடப்பாக்கம் பகுதிவாசிகள் சிரமம்
பரிதாபமான சாலையால் கூடப்பாக்கம் பகுதிவாசிகள் சிரமம்
பரிதாபமான சாலையால் கூடப்பாக்கம் பகுதிவாசிகள் சிரமம்
பரிதாபமான சாலையால் கூடப்பாக்கம் பகுதிவாசிகள் சிரமம்
ADDED : ஜூன் 19, 2024 01:14 AM

திருவள்ளூர்:திருமழிசை அடுத்துள்ளது பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்டது கூடப்பாக்கம் ஊராட்சி.
திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையிலிருந்து இந்த ஊராட்சிக்கு செல்லும் சாலையை இப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் சில இடங்களில் கற்களை கொண்டு சீரமைக்கப்பட்டுள்ளது.
இதனால் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருவதோடு அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வருவதில் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பலமுறை ஒன்றிய அலுவலகத்திற்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க வேண்டுமென கூடப்பாக்கம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.