/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தமிழக அரசை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம் தமிழக அரசை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
தமிழக அரசை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
தமிழக அரசை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
தமிழக அரசை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2024 11:56 PM

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி அருகே போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தவறிய தி.மு.க., அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
தே.மு.தி.க., திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு மாவட்ட செயலர் டில்லி, ஆவடி மாவட்ட செயலர் சங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தே.மு.தி.க., மாநில இளைஞரணி செயலர் கு. நல்லதம்பி பங்கேற்று பேசினார்.
இதில் 500க்கும் மேற்பட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள் பங்கேற்று அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவள்ளூர் டி.எஸ்.பி., அழகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அந்தோணி ஸ்டாலின், வெற்றிச்செல்வன், ரவிக்குமார் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் மேற்கொண்டனர்.