/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : ஜூன் 07, 2024 02:14 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சியில், இரண்டு கட்டங்களாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முதல்கட்டமாக, 54.78 கோடி நிதியில், 1 - 5 வரையிலான வார்டுகளை தவிர்த்து, மீதமுள்ள 22 வார்டுகளில், 41 கி.மீ., தொலைவிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வார்டுகளில் உள்ள தெருக்களில் பள்ளங்கள் தோண்டி, அதில் இரும்பு மற்றும் சிமென்ட் உருளைகள், 'மேன்ஹோல்கள்' ஆகியவை பொருத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
திட்டம் அறிவிக்கப்பட்டு, 13 ஆண்டுகளான நிலையில், பணிகள் துவங்கி நான்கு ஆண்டுகள் முடிந்துள்ளது. இதுவரை பணிகள் முழுமை பெறாமல் உள்ளன.
தற்போதும், சாலைகளில் பள்ளங்கள் தோண்டுவதும், அதை சரிவர மூடாமல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதுமாக பணிநடைபெறுகிறது.
நேற்று முன்தினம் பெய்த மழையில், மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில், சாலை உள்வாங்கி உள்ளது.
வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்து வருகின்றனர். வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், பொதுமக்கள் சார்பில், அந்த பள்ளங்களில் செடிகள், மரக்கம்புகள் வைக்கப்பட்டு உள்ளன.
இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்பவர்கள் பள்ளங்களில் தவறி விழுந்து விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.