/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பாழடைந்த பழைய பி.டி.ஓ., அலுவலக கட்டடம் பாழடைந்த பழைய பி.டி.ஓ., அலுவலக கட்டடம்
பாழடைந்த பழைய பி.டி.ஓ., அலுவலக கட்டடம்
பாழடைந்த பழைய பி.டி.ஓ., அலுவலக கட்டடம்
பாழடைந்த பழைய பி.டி.ஓ., அலுவலக கட்டடம்
ADDED : ஜூலை 03, 2024 12:54 AM

திருவாலங்காடு:திருவாலங்காடில் பி.டி.ஓ., அலுவலக கட்டடம் 1965ம் ஆண்டு திருவள்ளூர் -- அரக்கோணம் நெடுஞ்சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே கட்டப்பட்டது. இந்த கட்டடம் பழுதடைந்ததால், அதன் அருகே 2015ம் ஆண்டு புதிய பி.டி.ஓ., அலுவலக கட்டடம் கட்டப்பட்டது.
தற்போது பழைய கட்டடம் உறுதித்தன்மை இழந்து கூரை பழுதடைந்ததால், அதன் அருகே இயங்கி வந்த பல் மருத்துவமனை, சித்த மருத்துவமனை வேறு கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது எட்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், பலமிழந்த கட்டடம் இதுவரை அகற்றப்படவில்லை.
இந்த வளாகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சித்த மருத்துவமனை உள்ளிட்டவை உள்ளதால், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், கர்ப்பிணியர் வந்து செல்கின்றனர்.
அதேபோன்று நாடோடி வாழ்க்கை வாழும் 10க்கும் மேற்பட்டோர் ஆபத்தான பழைய பி.டி.ஓ., அலுவலக கட்டடத்தில் தங்கி உள்ளனர்.
இந்நிலையில் கட்டடம் உறுதி தன்மையின்றி உள்ளதால், இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ள கட்டடத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.