/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ புட்லுார் அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் புட்லுார் அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
புட்லுார் அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
புட்லுார் அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
புட்லுார் அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜூலை 27, 2024 01:55 AM

திருவள்ளூர்:ஆடி 2ம் வெள்ளி முன்னிட்டு திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள அம்மன் கோவிலில்களில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.
ஆடி மாதம் அம்மன் கோவிலில்களில் விசேஷ அலங்காரம், பூஜை நடைபெறுவது வழக்கம். நேற்று ஆடி 2ம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு, புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பெரியகுப்பம் மூங்காத்தம்மன் கோவில், நேதாஜி சாலை திரவுபதி அம்மன் கோவில், கொண்டமாபுரம் தெரு கன்னிகாபரமேஸ்வரி கோவில், தேரடி வேம்புலி அம்மன் கோவில், செக்கடி தெரு படவேட்டம்மன், முகமது அலி தெருவில் உள்ள கோலம் கொண்ட அம்மன் உள்ளிட்ட கோவில்களில், பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு கூழ் வார்த்து வழிபட்டனர்.
மேலும், பக்தர்கள் வேப்பிலை ஆடை அணிந்து, அம்மனை சுற்றி வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷகம் நடந்தது.