Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கடம்பத்துார் ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் வளர்ச்சி பணி

கடம்பத்துார் ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் வளர்ச்சி பணி

கடம்பத்துார் ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் வளர்ச்சி பணி

கடம்பத்துார் ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் வளர்ச்சி பணி

ADDED : ஜூலை 05, 2024 12:57 AM


Google News
Latest Tamil News
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில், 23வது ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜன் முன்னிலை வகிக்க, ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா தலைமை வகித்தார்.

கூட்டத்தில், வரவு - செலவினங்கள் வாசிக்கப்பட்டது. பின், ஒன்றியத்தில் கடம்பத்துார், மப்பேடு உள்ளிட்ட ஊராட்சிகளின் 52 இடங்களில் தார்சாலை, கால்வாய் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு, 2.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், 2024- - 25ம் ஆண்டு 15வது நிதிக்குழு மானியத்தில் 12 ஊராட்சிகளில், 1 கோடியே 7 லட்சத்து 9 ஆயிரத்து 676 ரூபாயில் மழைநீர் கால்வாய், மின்மோட்டார் போன்ற வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதேபோல், பல ஊராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கென, மொத்தம் 3 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 676 ரூபாய் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், 16 ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us