ஜெகந்நாத பெருமாள் ஏழூர் புறப்பாடு
ஜெகந்நாத பெருமாள் ஏழூர் புறப்பாடு
ஜெகந்நாத பெருமாள் ஏழூர் புறப்பாடு
ADDED : ஜூன் 26, 2024 12:46 AM

திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவில். இங்கு இந்த ஆண்டு ஆனிபிரம்மோற்சவ திருவிழா கடந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
பிரம்மோற்சவ திருநாளில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை கடந்த 19ம் தேதியும், தேர்த்திருவிழா 23ம் தேதியும் நடந்தது.
நேற்று பிரம்மோற்சவ நிறைவு நாளை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு திருமழிசை பேரூராட்சியில் உள்ள பிரையாம்பத்து எல்லையம்மன் கோவிலில் ஏழூர் புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து தீர்த்தவாரி நடந்தது. இரவு 7:00 மணிக்கு கொடியிறக்கத்துடன் ஆனி பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெற்றது.