/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையில் உலா வரும் மாடுகள் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம் சாலையில் உலா வரும் மாடுகள் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம்
சாலையில் உலா வரும் மாடுகள் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம்
சாலையில் உலா வரும் மாடுகள் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம்
சாலையில் உலா வரும் மாடுகள் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம்
ADDED : ஜூன் 03, 2024 04:47 AM

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம், தமிழக -- ஆந்திர எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 20,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 30க்கும் மேற்பட்ட கிராம வாசிகள், அத்தியாவசிய தேவைக்காக ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர்.
சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், நாகலாபுரம், பிச்சாட்டூர், நகரி, புத்துார், ரேணிகுண்டா, திருப்பதி, கடப்பா, கர்நுால், ஐதராபாத் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ஊத்துக்கோட்டை வழியே செல்கின்றன.
இதனால், ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்கும். ஊத்துக்கோட்டை பகுதியில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்து வருகின்றனர்.
இவர்கள், தங்களது கால்நடைகளை வீட்டில் கட்டி வளர்க்காமல் சாலையில் சுற்றித் திரிய விடுகின்றனர். இவை, கூட்டமாக இரை தேடி கடைகளுக்குச் செல்லும்போது வியாபாரிகள் அதை விரட்டுகின்றனர்.
இதனால், அவை தறிகெட்டு ஓடும் போது பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மீது மோதுகின்றன. இதனால், சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பேரூராட்சி நிர்வாகம் சாலையில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.