ADDED : ஜூலை 09, 2024 06:30 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே சூரப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 42. இவருக்கு சொந்தமான எருமை மாடு ஒன்று நேற்று முன்தினம் சூரப்பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே மேய்ந்து கொண்டிருந்தது.
அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த போது, எருமை மாடு மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.