/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பழங்குடியினருக்கு புதிய வீடுகள் கட்டும் பணிகள் விறுவிறு பழங்குடியினருக்கு புதிய வீடுகள் கட்டும் பணிகள் விறுவிறு
பழங்குடியினருக்கு புதிய வீடுகள் கட்டும் பணிகள் விறுவிறு
பழங்குடியினருக்கு புதிய வீடுகள் கட்டும் பணிகள் விறுவிறு
பழங்குடியினருக்கு புதிய வீடுகள் கட்டும் பணிகள் விறுவிறு
ADDED : ஜூலை 09, 2024 06:26 AM
திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில், 228 க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு குடியிருப்பதற்கு வீடுகள் இல்லாமல் மலைப்பகுதி மற்றும் நீர்நிலை புறம்போக்கில் குடிசைகள் அமைத்து வசித்து வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி திருத்தணி ஒன்றிய நிர்வாகம் முதற்கட்டமாக, கன்னிகாபுரம், கார்த்திகேயபுரம் மற்றும் சூர்யநகரம் ஆகிய மூன்று ஊராட்சிகளில், 79 இருளர்களுக்கு புதியதாக கான்கீரிட் வீடுகள் கட்டுவதற்கு, ஒரு வீட்டிற்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் வீடுகள் கட்டுவதற்கு டெண்டரும் விடப்பட்டுள்ளது.
இது குறித்து திருத்தணி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒன்றியத்தில் பழங்குடியினர் நலம் திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் ஊராட்சியில், திருத்தணி -- மாம்பாக்கசத்திரம் மாநில நெடுஞ்சாலையோரம், 27 வீடுகளும், கார்த்திகேயபுரம் இருளர் காலனி பகுதியில், 28 வீடுகளும், சூர்யநகரம் பகுதியில், 24 வீடுகளும் என, மொத்தம், 79 புதிய கான்கீரிட் வீடுகள் கட்டும் பணிகள், 50 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.
மீதமுள்ள பணிகள் இரு மாதத்திற்குள் முடித்து தேர்தெடுக்கப்பட்ட பயனாளிகளிடம் புதிய வீடுகள் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.