துாய்மை பணியில் கல்லுாரி மாணவியர்
துாய்மை பணியில் கல்லுாரி மாணவியர்
துாய்மை பணியில் கல்லுாரி மாணவியர்
ADDED : ஜூலை 11, 2024 10:23 PM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோவில் திருத்தணி நந்தியாற்றின் கரையோரம் உள்ளது.
இக்கோவில் வளாகத்தில் இருந்த செடி, கொடிகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் ஜி.ஆர்.டி., செவிலியர் கல்லுாரி முதல்வர் பத்மாவதி தலைமையில், 30க்கும் மேற்பட்ட மாணவியர் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், கோவில் வளாகத்தை துாய்மையாக வைத்திருப்பது அவசியம் என துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.