/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : மார் 13, 2025 10:48 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று, ஆவின் பால் உற்பத்தி அதிகரிப்பது தொடர்பாக பால் உற்பத்தியாளர் சங்க செயலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரதாப் பேசியதாவது:
புதிய சங்கங்களை ஆரம்பித்து செயலர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். செயலிழந்த சங்கங்களை புதுப்பித்தும், கால்நடைகளுக்கான தீவனங்கள் வளர்ப்பதை அதிகப்படுத்த வேண்டும்.
தனி நபருக்கு பால் வழங்குவதை முறைப்படுத்தி, ஆவினுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தரம் குறைவான பால்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பரிசோதித்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
சங்க செயலாட்சியர்கள் தங்களுக்கான இலக்குகளை தினமும் 'வாட்ஸாப்' வாயிலாக அறிக்கை சமர்க்க வேண்டும். பால் உற்பத்தியை பெருக்கி லாபகரமாக ஆவின் இயங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ஆவின் பொது மேலாளர் நாகராஜன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ், துணை பதிவாளர்- பால் வளம், சித்ரா, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ஜெயந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.