/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று அளிக்க கலெக்டர் உத்தரவு மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று அளிக்க கலெக்டர் உத்தரவு
மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று அளிக்க கலெக்டர் உத்தரவு
மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று அளிக்க கலெக்டர் உத்தரவு
மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று அளிக்க கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூன் 29, 2024 08:11 PM
திருவள்ளூர்:மாதாந்திர உதவி தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் வி.ஏ.ஓ.,விடம் வாழ்நாள் சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு, தொழுநோய் மற்றும் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட பலவகை மாற்றுத்திறனாளிகள் 6,247 பேருக்கு மாதாந்திர பராமரிப்பு தொகையாக, 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் அனைவரும், வி.ஏ.ஓ.,விடம் வாழ்நாள் சான்று பெற்று ஜுலை 20க்குள் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு நேரில் வந்து வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் வரவேண்டாம்.
தவறும் பட்சத்தில் பராமரிப்பு உதவித்தொகை நிறுத்தம் செய்யபடும். இதுதொடர்பான விவரங்களுக்கு 044- 27662985, 94999 33496-ல் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.