/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ லட்சிவாக்கம் கிராமத்தில் ‛'மக்களுடன் முதல்வர்' முகாம் லட்சிவாக்கம் கிராமத்தில் ‛'மக்களுடன் முதல்வர்' முகாம்
லட்சிவாக்கம் கிராமத்தில் ‛'மக்களுடன் முதல்வர்' முகாம்
லட்சிவாக்கம் கிராமத்தில் ‛'மக்களுடன் முதல்வர்' முகாம்
லட்சிவாக்கம் கிராமத்தில் ‛'மக்களுடன் முதல்வர்' முகாம்
ADDED : ஜூலை 15, 2024 11:09 PM
ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியத்தில், 53 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு துறை அதிகாரிகளை சந்தித்து மனுக்கள் வழங்கி தங்களது கோரிக்கைளை பூர்த்தி செய்கின்றனர். இதனால் கால விரயம் ஏற்படுகிறது.
இதை சரிபடுத்த ஒவ்வொரு ஒன்றியத்திலும், தமிழக அரசு சார்பில், 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக லட்சிவாக்கம் கிராமத்தில், எல்லாபுரம் ஒன்றிய ஆணையர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து, 200க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றார்.
இதில் வருவாய், உள்ளாட்சி, மின்சாரம், கால்நடை, வேளாண்மை, சுகாதாரம், காவல், நகர்ப்புற வங்கி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
தாமரைக்குப்பம், லட்சிவாக்கம், பாலவாக்கம், பனப்பாக்கம், பேரண்டூர், செங்கரை, செஞ்சியகரம், சென்னங்காரணி, சூளைமேனி, தாராட்சி ஆகிய, 10 ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
இரண்டாவது நாளாக இன்று பெரியபாளையம் எல்.கே.எஸ். திருமண மண்டபத்தில், 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சி நடக்கிறது.