/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கிளை சிறையில் நீதிபதி, கலெக்டர் சோதனை கிளை சிறையில் நீதிபதி, கலெக்டர் சோதனை
கிளை சிறையில் நீதிபதி, கலெக்டர் சோதனை
கிளை சிறையில் நீதிபதி, கலெக்டர் சோதனை
கிளை சிறையில் நீதிபதி, கலெக்டர் சோதனை
ADDED : ஜூன் 13, 2024 12:33 AM
பொன்னேரி:கிளை சிறைகளில் ஆய்வு மேற்கொள்ள, உயர் நீதிமன்றம் சமீபத்தில், அந்தந்த பகுதி நீதிபதிகளுக்கு அறிவுறுத்தியது. அதன்படி நேற்று, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா, திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையிலான குழுவினர், பொன்னேரி கிளை சிறையில் ஆய்வு மேற்கொண்டனர்.
சிறை கைதிகளுக்கு தயாரிக்கப்படும் உணவு, கைதிகள் ஒப்படைப்பு பதிவேடு, காப்பு புத்தகம், சிறை பதிவேடு, சமையலறை, சட்ட சேவை மையம், சிசிடிவி' பதிவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், கைதிகளிடம் அடிப்படை வசதி மற்றும் குறைகள் குறித்தும் குழுவினர் கேட்டறிந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறைகளும் ஆய்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அது தொடர்பான அறிக்கை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தெரிவித்தார்.
தொடர்ந்து, பொன்னேரி காவல் நிலையம், குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களையும் குழுவினர் ஆய்வு செய்தனர்.