/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தாழ்வழுத்த மின் வினியோகம் துணை மின் நிலையம் முற்றுகை தாழ்வழுத்த மின் வினியோகம் துணை மின் நிலையம் முற்றுகை
தாழ்வழுத்த மின் வினியோகம் துணை மின் நிலையம் முற்றுகை
தாழ்வழுத்த மின் வினியோகம் துணை மின் நிலையம் முற்றுகை
தாழ்வழுத்த மின் வினியோகம் துணை மின் நிலையம் முற்றுகை
ADDED : ஜூலை 31, 2024 03:06 AM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம், ராஜிவ் காந்தி நகர் பகுதியில், 100க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. மீஞ்சூர் அடுத்த மேலுார் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக இப்பகுதியில் தாழ்வழுத்த மின் வினியோகம் காரணமாக, வீட்டு உபயோக பொருட்கள் சரிவர இயங்கவில்லை. இதனால், குடியிருப்புவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதுகுறித்து மின்வாரியத்தினரிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், நேற்று அப்பகுதி வாசிகள், மேலுார் துணை மின்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அங்கிருந்த மின்வாரிய அதிகாரிகளிடம் தாழ்வழுத்த மின் வினியோகம் குறித்து புகார் தெரிவித்தனர்.
உடனடியாக அப்பகுதியில் உள்ள மின்பாதைகளை சீரமைத்தும், புதிய மின்மாற்றி அமைத்தும் தீர்வு ஏற்படுத்தி தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து, குடியிருப்புவாசிகள் கலைந்து சென்றனர்.