/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பீமாரெட்டியூர் தடுப்பணை சேதம் விவசாயிகள் அதிருப்தி பீமாரெட்டியூர் தடுப்பணை சேதம் விவசாயிகள் அதிருப்தி
பீமாரெட்டியூர் தடுப்பணை சேதம் விவசாயிகள் அதிருப்தி
பீமாரெட்டியூர் தடுப்பணை சேதம் விவசாயிகள் அதிருப்தி
பீமாரெட்டியூர் தடுப்பணை சேதம் விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜூன் 13, 2024 05:46 PM

ஆர்.கே.பேட்டை:
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பீமாரெட்டியூர், முள்ளிபாளையம், செங்கட்டானுார், மயிாலடும்பாறை, நாககுப்பம், பைவலசா, கட்டாரிகுப்பம் உள்ளிட்ட கிராமங்கள் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. சிறந்த நீர்பிடிப்பு பகுதியாக விளங்கும் இந்த பகுதியில் இருந்து மழைநீர் ஆறாக பாய்கிறது.
பீமாரெட்டியூர் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த நீராதாரத்தை நம்பி காய்கறி மற்றும் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். 15க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாய விளைநிலங்களுக்கு பாசன ஆதாரமாக விளங்கும் இந்த ஆற்றின் குறுக்கே, பீமாரெட்டியூர் அருகே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சிறப்பாக உள்ளது. இந்நிலையில், இந்த தடுப்பணை சேதம் அடைந்துள்ளது. இதனால், மழைநீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். விவசாயிகள் நலன் கருதி, தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.