/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ விபத்தை வரவேற்கும் கால்வாய் அச்சத்தில் அய்யனார் அவென்யூ விபத்தை வரவேற்கும் கால்வாய் அச்சத்தில் அய்யனார் அவென்யூ
விபத்தை வரவேற்கும் கால்வாய் அச்சத்தில் அய்யனார் அவென்யூ
விபத்தை வரவேற்கும் கால்வாய் அச்சத்தில் அய்யனார் அவென்யூ
விபத்தை வரவேற்கும் கால்வாய் அச்சத்தில் அய்யனார் அவென்யூ
ADDED : ஜூலை 31, 2024 03:02 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையம், பெரியகுப்பம், அய்யனார் அவென்யூ, எல்.ஐ.சி., பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள், நான்கு திருமண மண்டபங்கள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்ல, பொதுப்பணித் துறை கால்வாய் உள்ளது.
ஜே.என்.சாலையில் இருந்து அய்யனார் அவென்யூ பிரதான சாலை வழியாக இக்கால்வாய் செல்கிறது. சாலையை ஒட்டிச் செல்லும் இந்த கால்வாயில் தடுப்புச்சுவர் இல்லை.
இதனால், அவ்வப்போது வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கழிவுநீர் கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், கனரக வாகனங்கள் செல்லும் போது, கால்வாயில் விழுந்து விடும் அபாயமும் உள்ளது.
எனவே, பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கால்வாயில் தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.