/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தேரடி - ரயிலடிக்கு லிப்ட் கேட்கும் அவலம் மினி பேருந்து இயக்க மக்கள் எதிர்பார்ப்பு தேரடி - ரயிலடிக்கு லிப்ட் கேட்கும் அவலம் மினி பேருந்து இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
தேரடி - ரயிலடிக்கு லிப்ட் கேட்கும் அவலம் மினி பேருந்து இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
தேரடி - ரயிலடிக்கு லிப்ட் கேட்கும் அவலம் மினி பேருந்து இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
தேரடி - ரயிலடிக்கு லிப்ட் கேட்கும் அவலம் மினி பேருந்து இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 03, 2024 04:26 AM
திருவாலங்காடு: திருவாலங்காடு சுற்றுவட்டார கிராமங்களான பழையனுார், வீரராகவபுரம், புளியங்குண்டா, கூடல்வாடி, வேணுகோபாலபுரம் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், 25,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அத்தியாவசிய தேவை மற்றும் பணி நிமித்தமாக, சென்னை, திருவள்ளூர், அரக்கோணம் சென்று வருகின்றனர். இக்கிராமங்களில் இருந்து 5- - 10 கி.மீ., துாரமுள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்திற்கு தினமும் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வருவோர் ஆட்டோ வாயிலாகவும், இருசக்கர வாகனத்தில் வருவோரிடம் 'லிப்ட்' கேட்கும் அவலநிலை தொடர்கிறது. இதற்கு, பேருந்து வசதி இல்லாததே காரணம் என, இக்கிராம வாசிகள் புலம்பி வருகின்றனர்.
அதேபோல, ரயில் நிலையம் அருகே வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்தோர், பி.டி.ஓ., அலுவலகம், வேளாண் அலுவலகம், மேல்நிலைப் பள்ளி மற்றும் காவல் நிலையம் செல்ல தேரடிக்கு வரவேண்டி உள்ளது.
மக்கள் அதிகமுள்ள இப்பகுதியில் அரசு பேருந்து சேவை இல்லாததால், சில ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இங்கு, காலை 4:00 - இரவு 12:00 மணி வரை, 50,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். எனவே, திருவாலங்காடு தேரடி - ரயிலடி வரை மினி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.