ADDED : ஜூன் 11, 2024 04:53 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார், 32, சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டுகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும் ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
கடந்த 8 ம் தேதி ஆட் டோ ஓட்ட சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தேன்மொழி கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.