ஆடி கிருத்திகை ஜூலை 29ல் விடுமுறை
ஆடி கிருத்திகை ஜூலை 29ல் விடுமுறை
ஆடி கிருத்திகை ஜூலை 29ல் விடுமுறை
ADDED : ஜூன் 26, 2024 09:43 PM
திருவள்ளூர்:திருத்தணி ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு, ஜூலை 29ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஜூலை 29ல் ஆடிக்கிருத்திகை நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை ஈடுசெய்யும் வகையில், ஆக., 10ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.